வூ ஹோட்சி கோயில் சந்தையின் “சந்தோஷக் கடவுள்” தெரிவு நிகழ்வு தொடக்கம்
சீனாவின் சிச்சுவான் மாநிலத்தின் செங் து நகரின் வூ ஹோட்சி (Wu Hou Ci)என்ற இடத்தில் கடந்த சில ஆண்டுகளில் நடைபெற்ற கோயில் சந்தையில் தேர்ந்தெடுக்கப்பட்ட “சிறு சந்தோஷக் கடவுள்கள்” என்று அழைக்கப்பட்ட குழந்தைகள் ஜனவரி 13ஆம் நாள் அழகான ஆடையை அணிந்து, ஆனந்தக் கடவுள், புகழ்க் கடவுள், நீண்ட ஆயுள் கடவுள், சந்தோஷக் கடவுள், செல்வக் கடவுள் ஆகிய ஐந்து அணிகளில் குழந்தை காப்பகம், போக்குவரத்து காவல் நிலையம், முதியோர் இல்லம், தீ அணைப்பு நிலையம் மற்றும் குடியிருப்புப் பகுதிகளுக்குச் சென்று, அங்குள்ள மக்களுக்கு சீனப் பாரம்பரிய வதந்த விழாவின் இன்பம் மற்றும் நல்வாழ்த்துக்களை வழங்கினர்.
15-Jan-2025