சீன-அமெரிக்க ஆக்கப்பூர்வ நெடுநோக்கு நிதான உறவை நனவாக்க வேண்டும்:ஷிச்சின்பிங்
உள்ளூர் நேரப்படி 24ஆம் நாள் காலை, சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் அமெரிக்க அரசுத் தலைவர் டிரம்புடன் வெள்ளை மாளிகையில் பேச்சுவார்த்தை நடத்தினார்.
ஷிச்சின்பிங் கூறுகையில், சீன-அமெரிக்க ஆக்கப்பூர்வ நெடுநோக்கு நிதான உறவு என்ற புதிய திசையமைவு, இரு நாட்டுறவின் நடைமுறையை வெளிப்படுத்தியுள்ளதோடு, எதிர்காலத்துக்கான எதிர்பார்ப்பையும் காட்டுகிறது என்றார். இது இரு நாடுகளும் சரியான முறையில் பழகுவதற்கான வழியை நோக்கிய ஒரு முக்கியமான படியாகும். இரு நாடுகள் கூட்டாகச் செயல்பட்டு, மேலும் நிதானமான ஆரோக்கியமான தொடரவல்ல சீன-அமெரிக்க உறவின் எதிர்காலத்தை உருவாக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
25-Sep-2026